Tuesday, June 2, 2015
என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை... இன்னிக்கி கார்த்தால ஆறு மணிக்கு அவ கிட்ட இருந்து ஃபோன். கொஞ்சம் டென்ஷனாத்தான் ஃபோன எடுத்தேன்..
“அக்கா இன்னிக்கி வேலைக்கு வந்த்ருவேன்”
“பொண்ணு எப்டி இருக்கா”
“அதுக்கு பேய் பிடிச்சுருச்சுக்கா... அது தெரியாம ஆஸ்பத்திரிக்கு இட்டுகினு போய், மண்ட ஸ்கேன்லாம் வேற எடுத்தோம்.. அப்புறம் பக்கத்து வீட்டு அக்கா சொல்லிச்சுனு கார் எடுத்துகிட்டு காஞ்சிபுரம் போய் அங்க ஒருத்தரு கிட்ட மந்த்திரிக்க கூட்டி கிட்டு போனம்.. அவருதான் கண்டுபிடிச்சு மாங்காடுல ஒரு அம்மாவ பாக்க சொன்னாரு.. நேத்து மாங்காடு கூட்டிகினு போனம்.. அந்தம்மா இன்னும் முன்னாலயே கூட்டு வந்த்ருக்கலாம்லனு திட்டிச்சு.. (வெள்ளை கோட் டாக்டர் மட்டும்தான் இந்த டயலாக் அடிக்கனுமா).
ஒண்ணும் கவலப்படறதுக்கில்லக்கா.. உச்சி மண்டைல இருந்து முடி எடுத்து மந்திருச்சு மரத்துல வச்சு ஆணி அடிச்சுட்டா எல்லாம் சரியா போய்டும்கா... நான் கூட கல்யாணம் வச்சுருக்கே என்ன உடம்பு வந்த்ருச்சோன்னு பயந்துட்டென்.. (வாய் கொள்ளா சிரிப்பு வேற)... அது புது வருஷத்தின்னிக்கி ராத்ரி ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போய்ட்டு வந்துச்சுக்கா.. அப்பத்தான் பேய் பிடிச்சுருச்சு... பேய் ஒடம்புல இருக்க சொல்லத்தான் பத்து நாளா ஒண்ணுமே சாப்பிடல”
“என்ன இப்பிடி பேசற.. ஸ்கேன் ரிஸல்ட் என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னார்”
“என்னக்கா வெவரம் இல்லாம பேசற.. அதுதான் பேய் பிடிச்சுருக்குனு கண்டு பிடிச்சிட்டம்ல...ஸ்கேன் ரிப்போர்ட்டு லாம் வாங்கவே இல்ல”
என்னத்த சொல்ல..
திருந்தாம போச்சே ஊரு சனம் தான்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment