Tuesday, June 2, 2015
இன்று காலை, கிண்டில ஷேர் வேன்ல ஆறு பேர் அமரும் இடத்தில் ஒரு இடம் காலியாய் இருந்த போது, அதிகபட்சம் பத்து வயது இருக்கும் பையன், "அண்ணா அடையார் போகுமா"
"போகும்.. போகும் ஒருத்தருக்கு இருபது ரூபாய்"
சற்று யோசனையுடன் அவன் அம்மாவை பார்க்க அவள் தலையசைத்ததும் வேகமாக வண்டியில் ஏறி, "வாங்க வாங்க எல்லாரும் சீக்கிரம் ஏறுங்க" என்று சொல்லி மூன்று பெண்மணிகள், ஒரு கைக்குழந்தை , ஒரு மூன்று வயது குழந்தை, ஒரு எட்டு வயது பையன், ஒரு சூட்கேஸ் , ஒரு ஏர் பேக் அனைத்தயும் லாகவாமாக ஏற்றி தான் ஸ்டைலாக நின்று கொண்டு, இடையில் சாம்சங் ஸ்மார்ட் போனில் கால் அட்டெண்ட் பண்ணி, எந்த இடத்தில் இறங்கனும்னு ட்ரைவர் கேட்டப்ப, அந்த பெண்கள் பதில் சொல்வதற்கு முன், "கான்சர் ஆஸ்பத்திரி தாண்டி ஒரு கோவில் வரும்ல அது தாண்டினவுடன நா சொல்றேன் அங்க நிறுத்துங்க" இடையிடையே அந்த குட்டி பெண்ணை ஜன்னலுக்கு வெளியே கை விடாமல் பார்த்துக் கொண்டு... "இங்கதாண்ணே வண்டிய நிறுத்துங்க "
இறங்கி பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாய எடுத்துக் கொடுத்து, "மூணு பேருக்கு எடுத்துகிட்டு மிச்சம் கொடுங்கண்ணே
"டேய் என்னடா ஒரு ஊரையே ஏத்திட்டு மூணு பேருங்கற"
"நாங்கல்லாம் சின்ன பசங்க தானேண்ண"
:):)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment