Tuesday, June 2, 2015
என்னுடைய மகள் பத்தாவது படிக்கும் போது தினமும் ஸ்கூட்டியில் ட்யூஷனுக்கு விடுட்டு முடியற வரைக்கும் அங்கேயே சில அம்மாக்கள் நாட்டு நடப்பெல்லாம் (?) பேசிட்டு ட்யூஷன் முடிஞ்சவுடன கூட்டிட்டு வரது வழக்கம்... அதனால் கிடைத்த சில நட்புகள் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள்...
பதினோராம் வகுப்புக்கு மகள் வேறு பள்ளி சேர தொடர்பு சற்று குறைந்து போனது. அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது திடீர்னு ஒரு கால், பழைய ட்யூஷன் நட்பு,
"சுபர்ணா அம்மா.. நீங்கதானே"
"ஆமாம் நாந்தான் சொல்லுங்க"
"இல்ல.. இன்னொரு கால் வரது அப்புறம் பேசறேன்"
ஒண்ணும் புரியல...
கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு அதே நட்பு வட்டம்
"ஜெயந்தி எப்டி இருக்கேள்... உங்களுக்கு ஒண்ணுமில்லயே"
என்று படபடப்பான குரல்..
"எனக்கு ஒண்ணுமில்லயே என்னாச்சு"
"ஒண்ணுமில்ல.. நீங்க நல்லாருக்கேளா"
"அடக்கடவுளே நான் நல்லாத்தான் இருக்கேன்.. சொல்லுங்கோ"
"சரி இந்த விக்னேஷ் அம்மா என்னய ரொம்ப குழப்பிட்டங்க.. ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன்..அதான்"
"ஆமாம் இப்பத்தான் கொஞ்ச முன்னால கால் பண்ணினாங்க... உடனே வச்சுட்டாங்க..என்ன விஷயம்"
"இல்ல எப்படி சொல்றதுன்னு..."
"அட சொல்லுங்க சஸ்பென்ஸ்
தாங்க முடியல என்னதான் ஆச்சுங்க"
"இல்ல...அவங்க கேள்விப்பட்ட செய்தி.. ட்யூஷனுக்கு டாலா ஒரு பொண்ணு வருமே... அவங்கம்மா பிங்க் ஸ்கூட்டில வருவாங்களே அவங்க ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க அப்டின்னு... சரி விடுங்கோ ... உங்களுக்கு ஆயுசு நூறு"
ஒரு சிரிப்புடன் அதை கடந்து விட்டேன்... ஆனால் உண்மை தெரிந்து மனசு ரொம்ப பாரமாயிடுத்து..
என் மகள் செட்ல இருந்த ஒரு பெண்ணின் அம்மா, தன்னுடைய இன்னொரு பெண்ணை எதோ ஒரு க்ளாஸில் விட்டுவிட்டு அந்த கேப்ல காய் வாங்கி வரும் போது விபத்து.. ஸ்பாட்ல உயிர் பிரிந்து விட்டதாம்..
சொல்ல விட்டது....டாலான அந்த பெண்ணும் அவங்க வீட்டு பிங்க் ஸ்கூட்டியும்..
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment