Thursday, March 12, 2009

இன்றைய சமுதாயம்

மார்ச் மாதம் , தேர்வுகள் வந்தாச்சு. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளும் அதிகமாகி விட்டது. இது வருடா வருடம் தொடர்கிறது. வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த கால கட்டத்தில் இளம் சமுதாயத்தினருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவது துரதிர்ஷ்டமான விஷயம். இவர்களுக்கு தக்க கவுன்சிலிங் முதலிலிருந்தே செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. என்ன, அதற்கு முன்னால் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாம் இந்த செய்திகளை படித்து விட்டு ஐந்து நிமிடம் அநுதாபப் பட்டு விட்டு அடுத்த செய்திக்கு போய் விடுகிறோம். நாட்டுல செய்திகளுக்கா பஞ்சம்.

எனக்கு தெரிஞ்சு 20 வருடம் முன்னால் எங்கள் அடுத்த வீட்டு பையன் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன்னால் (பிப்ரவரி என்று நினைக்கிரேன்) காணாமல் போனான். தேடாத இடம் பாக்கி இல்லை. சரியாக ஒரு வருடம் கழித்து அவன் திருச்சி பஸ்டாண்டில் திரு திரு என்று முழித்துக் கொண்டிருப்பதை எங்கள் தெருவில் உள்ள ஒருவர் பார்த்து விட்டு குரல் கொடுத்திருக்கிறார். முதலில் பயந்து ஓடியவன் பிறகு வந்திருக்கிறான். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடே தேவலை என்று வந்திருக்கிறான். ஆனால் அப்பா, சித்தப்பாக்கள் டின் கட்டுவார்களோ என்று பயம். அப்புறம் அவனை சமாதானப் படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு செய்தி தெரிவித்து அவனை அவர்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது. இப்பொழுது மணமாகி நன்றாக இருப்பதாக கேள்வி. எல்லோருக்கும் ஒரு வழி பிறக்காமலா போகும்?

2 comments:

கிவியன் said...

வருடம் தோறும் நடக்கும் இந்த தற்கொலைகள் அதுவும் தேர்வில் தோல்வி அல்லது தேர்வு கண்டு பயம் என்பது இவர்களை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தினால் பின்னால் இவர்களே அது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நிச்சயம் உணர்வார்கள். ஆனால் இவர்களுக்கு இருக்கும் மனச்சுமையை எப்படி அறிவது?

//நாம் இந்த செய்திகளை படித்து விட்டு ஐந்து நிமிடம் அநுதாபப் பட்டு விட்டு அடுத்த செய்திக்கு போய் விடுகிறோம். நாட்டுல செய்திகளுக்கா பஞ்சம்//

பரவாயில்லையே அநுதாபமாவது பட நேரமிருக்கிறதே.

அந்த ஓடிப்போன அடுத்த வீட்டு பையன் பற்றி படித்ததும் எனக்கு என் வாழ்கையில் நடந்தது ஞாபகத்துக்கு வருகிறது. என் அண்ணனும் அக்காவும் நன்றாக படிப்பவர்கள். நானோ, சமூகத்துல பள்ளிக்கூடம் போக வேண்டிய கட்டுப்பாட்டுக்கு பயந்து ”எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு” போன கதையாக என் படிப்பு இருந்தது. ஆனால் என் அம்மா மிகவும் நல்லவள். படிப்பு இப்படி இருக்கிறதே என எப்போதும் கோபித்துக்கொண்டது கிடையாது. மனதளவில் இருந்திருக்கும். இப்படி இருக்கையில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு முன், அவ்வப்போது மிக மும்முரமாக கதை புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன். பரீட்சை நடக்கும் போதே, Jeffry Archerன் Kane and Abel கீழே வைக்க முடியவில்லை. இத பாத்துட்டு வீட்டுல கொஞ்சம் கடுப்பாயிட்டாய்ங்க. உருப்படவே போரதில்லன்னனு கிட்டதட்ட சாபமே கிடைத்து. பின்பு ரிசல்ட் வந்த நாள். பள்ளியிலிருந்து மார்க் ஷீட்டை எடுத்துக்கொண்டு போனேன். வீட்டில் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். என்ன மார்க் என்று வாங்கி பார்த்து, எதோ 400 கிட்ட எதிர்பார்த்திருப்பாய்ங்க போலிருக்கு, 384ன்னு பார்த்ததும் அம்மா புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க, அவங்க ரெண்டு பேர பத்தி கவல இல்ல இவன் என்னவாக போரானோன்னு, அண்ணன் இதுல கத புக்கு வேரன்னு ஆளாளுக்கு ரவுண்டு கட்டிட்டாய்ங்க. நடுவுல சிவகுமார் எவ்வளவுன்னு கேட்டாங்க, (அடிக்கடி வீட்டுக்கு வருவான்) 420ன்னதும், அர்ச்சனை இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கா சரியான பசி வேர, பயங்கரமா கோவம் வந்துடுச்சி. எதையாவது பரபரப்பா பண்ணனும்னு ஒரு வேகம் வந்ததுல, சரிதான் போங்கடான்னு வீட்டை விட்டு ஓடி, போடி நாயக்கனூர் செல்லும் ரயில் பாதையில் (இது வீட்டுக்கு மிக அருகில் இருக்கிறது) ஓட ஆரம்பித்து, பைக்காரா மலையடிவாரம் வரை வந்துவிட்டேன். அன்று என் பெரியப்பா மகனும் (என்னைவிட பெரியவன்) இருந்தான். என்னுடன் மிகவும் நெருக்கமானவன், நண்பனைப் போல. நான் வீட்டை விட்டு போனதும், வீட்டிலிருப்போரை, சற்று கடிந்துகொண்டு, பின்னாலேயே ஓடி வந்திருக்கிறான். நான் பைக்காரா அடிவாரத்தில் உச்சி வெய்யிலில் வந்தது மிக களைப்பாக இருக்க பசி வேறு, ஒரு கல்லில் உட்கார்ந்த பின், பார்த்தால் பெரியப்பா பையன் பாலு வந்து சேர்ந்தான்.

”எதுக்காக இப்படி ஓடி வந்தன்னு” கேட்டான்.

”ஆமா இப்படி ஆளாளுக்கு திட்டினா?” என்றேன்.

”சரி இப்ப என்ன பண்ணப் போறன்னு” கேட்டான்.

யாருக்கு தெரியும். ஏதோ அந்த நேரம் அந்த சீன்லேர்ந்து அப்ஸ்காண்டு ஆகனும்னு ஒரு வேகத்துல வந்தாச்சு. இப்ப இவன் கேட்ட பின்னாடிதான் எனக்கே, ஆமா இப்ப என்ன பண்ணுவதுன்னு ஞாநோதயம் வந்தது.

பத்தாவது முக்கியமான பரிட்சை. மார்க் கொரச்சலா வாங்கினதால வீட்டுல அப்படிதான் கோவிச்சுப்பாங்க கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாயிடும், அதுக்காக இப்படி ஓடினா நீதான் கஷ்ட்டப் படப்போரன்னு பாலு சொன்னான். மிகவும் சரிதானேன்னு தோன்றியது. ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டாத கணக்கா, ம்ம் சரி போகட்டும் வரேன் ஆனா மறுபடியும் யாரும் இதப் பத்தி பேசக்கூடாதுன்னு பாலுவிடம் வீராப்பு பேசி, பசி காதை அடைக்குது போனவுடனே சாப்பிடன்னுடாப்பானு அவனுடன் வீட்டுக்கு திரும்பச் சென்றேன். அதை இப்போது நினைத்தால் கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிப்பா வருது.

நிச்சயம் ஓடிப்போவதோ, இல்லை உயிரை விடுவதோ மிகவும் கோழைத்தனமானது. பாலு மாதிரி பலருக்கும் தக்க சமயத்தில் புத்தி சொல்ல யாரும் கிடைப்பதில்லை. அதனாலேயே இந்த மாதிரி நடந்துவிடுகிறது.

எதோ என் ஞாபகங்களை கிளறிவிட்டதால் சற்று நீண்ட பின்னூட்டமாகிவிட்டது.

கிவியன் said...

நீ முதலில் இந்த பதிவிட்டாயா இல்லை ராமகிருஷ்ணன் தன்னுடைய பதில் இல்லாத பரிட்சை பதிவை இட்டாரா? எனினும் இருவரும் ஒரே விஷயத்தை பற்றி சொல்லியிருப்பது, இந்த பரிட்சை நேர அழுத்தத்தை குறைக்க யாரும் ஒன்றும் செய்யாததை சுட்டிக் காட்டுகிறது.