நாம் காணும் கனவுகளை பற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. கனவில் வரும் காட்சிகள் எல்லாம் நாம் நிஜத்தில் அனுபவித்தவையாக இருக்கும் என்கிறார்கள். சில சமயம் இவ்வாறு கனவு வந்தால் இதெது நடக்கும் என்கிறார்கள்.
என்னுடய கனவில் எப்பொழுதும் பிரம்மாண்டமாக எல்லாம் வரும். மிகப் பெரிய மலைகள், மிகவும் அகலமான, நீளமான நதிகள், பெரிய மலைப் பாம்பு இப்படித்தான் வரும். சமீபத்தில் ஒரு மிகப் பெரிய கோவில் கோபுரம். நுழைந்தவுடன் ஒரே ஒரு சன்னிதி. இது அமைந்திருந்தது மிகவும் சுமாராக பராமரிக்கப் பட்டிருந்த ஒரு பரந்த இடத்தில். இவ்வாறு வரும் கனவுகளுக்கு நானாக கொடுத்துக் கொள்ளும் விளக்கம். நாம வாழ்க்கைல ரொம்ப பெரிசா ஏதோ சாதிக்கப் போறோம் என்பது தான். ஆனால் இது வரை கனவு மட்டும் தான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த பிரம்மாண்டத்தை நான் ரசிக்கிரேன். நான் இவற்றை விரும்புவதால் கூட இந்த மாதிரியான கனவுகள் வரலாம். சின்ன வயதில் பாண்டி விளையடுவதற்கு I first என்று கத்திக் கொண்டே தான் தினமும் எழுந்திருப்பேன்.
இப்பொழுதும் என் பையன் கனவில் தொடர்ந்து வருவது கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட்தான்.
Thursday, February 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)


1 comment:
இப்போது வேலை செய்கிறது.
//கனவில் வரும் காட்சிகள் எல்லாம் நாம் நிஜத்தில் அனுபவித்தவையாக இருக்கும் என்கிறார்கள்// எனக்கு, ரஜியை வைத்து சினிமா எடுத்தது போல் ஒரு கனவு வந்துகொண்டே இருந்தது...
//நுழைந்தவுடன் ஒரே ஒரு சன்னிதி. இது அமைந்திருந்தது மிகவும் சுமாராக பராமரிக்கப் பட்டிருந்த ஒரு பரந்த இடத்தில்.// ஒரு காலத்துல தஞ்சை பெரிய கோவில் இப்படிதான் இருந்தது, ஒரு வேளை அதுதானோ? ஆன இது சிவனாச்சே? இடிக்குதே?
//இவ்வாறு வரும் கனவுகளுக்கு நானாக கொடுத்துக் கொள்ளும் விளக்கம். நாம வாழ்க்கைல ரொம்ப பெரிசா ஏதோ சாதிக்கப் போறோம் என்பது தான். ஆனால் இது வரை கனவு மட்டும் தான் பெரிதாக வந்து கொண்டிருக்கிறது.// ஒரு விஷயம் நல்லா புரியுது அநேகமா 24 மணி நேரத்துல 12 மணி நேரம் தூங்கினாத்தான் இப்படி பிரும்மாண்ட கன்வு வரும்னு Dr. லார்ட் லபக்குதாஸ் சொல்லுவார்.
Post a Comment