Wednesday, February 4, 2009

அபியும் நானும்

சினிமாவில்தான் அபியும் அப்பாவும். நிஜத்தில் அபியும் அம்மாவும்தான். (அது அபி நயா வாக இருந்தாலும் சரி அபி ஷேக் காக இருந்தாலும் சரி) நான் குழந்தைகளை பள்ளியில் விடும்போது எவ்வளவு அம்மாக்களை பார்க்கிறேன். எவ்வளவு அம்மாக்களுடன் பழகுகிறேன். அப்பாக்கள் ஒரு two wheeler or car with driver (அவரவர்கள் வசதிக்கேற்ப), மனைவி பேரில் ஒரு bank account with reasonable balance ஆகியவற்றை மனைவிக்கு கொடுத்து விடுகிறார்கள். (I am talking about house wives. நிறைய பேர் இருக்காங்கப்பா). இதை வைத்துக் கொண்டு அம்மாக்கள் குழந்தைகளை எல்லா கூடுதல் வகுப்புகளிலும் போட்டு விட்டு அவர்களுடன் அலைந்து கொண்டு, எப்பொழுதும் அவர்கள் நினைவாகவே கவலை பட்டுக் கொண்டு(முக்கியமாக தன் குழந்தையை விட திறமையான குழந்தயை பார்க்கும் போது). இதில் குழந்தைகள் ரொம்பவே பாவம். அதுக்கு interest இருக்கோ இல்லையோ அம்மா சொல்பவற்றை கேட்டுக் கொண்டு. இந்த போராட்டம் L.K.G முதல் ஆறு ஏழு வகுப்புகளுக்கு தொடற்கிரது. இது குறைவதற்கு காரணங்கள்
1. பள்ளி பாடம் அதிகமாவது
2. குழந்தைகளின் விழிப்புணர்வு (போம்மா வேற வேல இல்ல என்னால முடியாதுன்னு சொல்ர தைரியம் வருவது)
3. அப்பாக்களின் விழிப்புணர்வு. (என்னடி இது இவ்வளவு நாளா பணம் செலவழிக்கர பெருசா ஒண்ணும் result இல்லயே) - எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாம் வராது. அதுகளுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துத்தான் சேர்க்க வேண்டும்.
4. அம்மாக்களுடய energy level குறைவது.

ஆனால் படுத்தல் வேறு உருவத்தில் வருகிரது. IIT coaching அது இது என்று மூச்சு விட நேரம் இருப்பதில்லை.
ஒரு அம்மா என்னிடம் சொன்னது.
" எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பாருங்கோ படிச்சதையெல்லாம் மறந்துட்டேன்னு சொல்றா. இவளுக்காக தினமும் சுந்தர காண்டம் படிக்க ஆரம்பிக்கணும். இவ ஒழுங்கா படிச்சா இதெல்லாம் எனக்கு தேவையா?"(பாவம் ராமர்)
அன்பு, பாசம் என்று இவர்கள் படுத்தும் பாட்டில் இருந்து குழந்தைகளுக்கு என்று விமோசனம்???? இவர்களுடய பொழுது போக்கிற்கு குழந்தைகளை வைத்து விளையாடுகிறர்களோ என்று தோன்றும்.

3 comments:

Unknown said...

ஹலோ ஜெ,

துணிந்து வலையில் விழுந்ததற்கு வாழ்த்துக்கள். படிக்கும் பழக்கம் உள்ள எல்லோருக்கும் மனதின் மூலையில் நாமும் இது மாதிரி எழுதினா என்ன என்று ஒரு மூலையில் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்யும். வலை இதற்கு மிகச் சிறந்த வடிகால்.
தொடர்ந்து எழுதவும்.

வலை தலையின்(header) பின்னனியில் உள்ள சித்திரம் தலைப்புக்கு ஏற்றாற் போல் உள்ளது. யார் அந்த ஓவியர் "மூனா" ? பார்த்து காப்பிரைட் கேட்டு ஒலை அனுப்பி விடப்போகிறார்.

//இந்த போராட்டம் L.K.G முதல் ஆறு ஏழு வகுப்புகளுக்கு தொடற்கிரது.// ஏன் அதற்கப்புறம் யாராவது தேவ தூதர்கள் வந்து பார்த்துக்கொள்வார்களா?

இந்தியாவில் அப்பாகள் காசை (cause) தொடுத்துவிட்டு பின்பு எபெஃக்டை மட்டும் எதிர்பார்பவர்களா?

எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் ஏதாவது ஒரு தேர்வு முறை வேண்டும். ஆனால் இந்தியாவில் (சீனாவிலும் கூட) குழந்தைகள் இதற்கு கொடுக்கும் விலை மிக அதிகம். தங்கள் குழந்தை பருவத்தில் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் இழந்து, போட்டி போட்டி என்று நிறுத்த முடியாத பந்தயம் போல், என்ன ஏது என்று பார்ப்பதற்குள்அவர்கள் 21 வயதை அடைந்த்து விடுகிறார்கள்.

//அன்பு, பாசம் என்று இவர்கள் படுத்தும் பாட்டில் இருந்து குழந்தைகளுக்கு என்று விமோசனம்????//

//இவர்களுடய பொழுது போக்கிற்கு குழந்தைகளை வைத்து விளையாடுகிறர்களோ என்று தோன்றும்.//
இரண்டும் வாக்க்கியங்களும் முறனாக எனக்கு தோன்றுகிறது. பொழுது போக்கிற்கா பெற்றோர்கள் இத்தனை பாடு படுகிறார்கள்?

பிகு: பின்னூட்டத்தை மட்டுறுத்தவும் (enable comment moderation in blog settings) இல்லையென்றால் போகிற வருகிற புனித பிம்பங்கள் எதையாவது எழுதிவிட்டு போவார்கள், பின்பு தாங்கள் எழுதுவதையே நிறுத்துமளவுக்கு மண்டை குடைச்சல் ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

Siva said...

I am glad my parents never forced any of us ( me and my other 2 siblings into any of this). Sometime I feel I should have been forced into learning nicer things in life, the grass I guess is always greener on the other side.

கிவியன் said...

அரிஸ்டாட்டில் அண்ணா,

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடலே, என் பெரியப்பா சொன்னதுதான் உனக்கும், கண்ணில பார்வை போகு முன் படித்துவிடு.