Tuesday, March 17, 2009

சமீபத்தில் படித்தவை

சமீபத்தில் படித்தவை இரண்டு புத்தகங்கள். ஒன்று சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கங்கள் 1965-1998, இரண்டு லா.ச.ரா வின் படைப்பிலக்கியங்கள். இரண்டுமே அற்புதமாக இருந்தன.
முதலில் சுஜாதா. ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசி பக்கங்களின் diluted version தான் கற்றதும் பெற்றதும் என்று தோன்றுகிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறார் எப்பொழுதும் போல. இன்னும் தைரியமாக எல்லோரையும் விமர்சித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்.
அடுத்து ல.ச.ரா. இவ்வளவு நாள் இவரை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன். அவருடயதிலிருந்து சில வரிகள்.
"மனித வித்துக்குத்தான் ஒரு மகத்துவம் உண்டு. ஒரே மரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளை விடும், அவரை பூக்கும். பாகல் படரும்."

"குடும்பம் ஒரு க்ஷீராட்சி. அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், அம்ருதம், ஆலகால விஷம் எல்லாம் உண்டாகிறது."

(மாமியார் மருமகளிடம்)
"நம் ஸ்த்ரீ வர்க்கத்தை சொல்கிறேன். ஆண்கள் - தகப்பனிலிருந்து ஆம்படையான் உள்பட கைக்குழந்தை வரை - குழந்தைகள், செல்லக் குழந்தை, அசட்டுக் குழந்தை, பிடிவாதக் குழந்தை. நாம்தான் ஸஹிச்சுண்டு போகணும் என்கிற பாடமாத்தான் சிருஷ்டியிலேயே தூய்மையான
பதவியை நமக்கு கொடுத்திருக்கு. அவா பேச்சிலே நமக்கு பிடிக்காததை காதிலேயே வாங்கிக்
கொண்டாதானே வம்பு? பெண்கள் சமயத்தில் கொஞ்சம்
செவிடு, கொஞ்சம் குருடு, கொஞ்சம் மக்காயிருந்தால்தான்
குடும்பமே நடக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம்தான்.
ஞாபகம் இருக்கட்டும். ரஸத்தில் கொத்தமல்லியைக் கிள்ளிப்
போட்டாப் போல். அதிகமாகப் போனால் பச்சை வாசனை."

2 comments:

கிவியன் said...

சும்மா //இரண்டுமே அற்புதமாக இருந்தன// என்று எழுதினால் என்ன அர்த்தம்? ம்ம பாரு நான் இதெல்லாம் படிக்கறேன்னு காட்டவா?

//அடுத்து ல.ச.ரா. இவ்வளவு நாள் இவரை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன்// never late, சிந்தாநதி படிச்சாச்சா?

லா.ச.ரா, வார்த்தைகளின் சூத்திரதாரி, படிச்சா சும்மா உள்ள அதிரும்ல..,

ஒரு பிகு: தயவு செஞ்சு, பின்னூட்டத்திற்கு இருக்கும் word verification-ஐ எடுத்தா புண்ணியமா போகும்.

ஜெயந்தி நாராயணன் said...

இந்த எழுத்தை அநுபவிக்கத்தான் முடிந்தது. அதைப் பற்றி அதற்கு மேல் எழுத எனக்கு என்ன தகுதி?