Thursday, March 19, 2009

நாய் (வளர்ப்பவர்கள்) ஜாக்கிரதை

நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் காலை. பால் வரவில்லையே என்று பார்ப்பதற்காக வாசல் கேட்டை திறந்து கொண்டு சென்றேன். அப்போது கன்றுக்குட்டி ஸைசில் ஒரு நாய் என்னை நோக்கி பாய்ந்து ஓடி வந்தது. நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்து ஜன்னல்களில் ஓரிரு முகங்கள் தோன்றி மறைந்தன.
"Tiger come here"
எனக்கு ஒரு அடி முன்னால் அந்த நாய் சட்டென்று நின்றது. அதைத் தொடர்ந்து ஒரு குரல்,
"பயப்படாதீங்க. ஒண்ணும் பண்ணாது. சும்மா ஜாலியா ஓடி வந்தது"
எனக்கு முதலில் பயத்தில் குரல் வரவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு,
" என்னங்க நாயக் கைல பிடிச்சுண்டு வர மாட்டிங்களா"
"டைகர் ரொம்ப சாதுங்க. பார்க்கத்தான் அப்படி இருக்கும்"
நான் டென்ஷன் ஆகி உள்ள வந்துட்டேன். எனக்கு தெரு நாய்களைக் கண்டால் அவ்வளவு பயம் இல்லை.
நாய் வளர்ப்பவர்கள் பண்ணும் லொள்ளுதான் ரொம்ப ஜாஸ்தி.
முன்ன ஒரு முறை கடைக்கு போன போது ஒரு பெண் தன்னுடய நாயுடன் வந்தாள். எப்பொழுதும் போல் அதைப் பார்த்தவுடன் பயந்து நகர்ந்தேன். உடனே அவள் நாயிடம், " இங்க வா aunty பயப்படறாங்க பாரு" அப்படின்னா. செம கடுப்பு.

இரண்டு நாட்களுக்கு முன் walking போகலாமென்று நானும் என் பெண்ணும் கிளம்பினோம். அப்ப ஒரு பெண், தன் நாயுடன் walking வந்து கொண்டிருந்தாள். அங்கிருந்த சில தெரு நாய்களை பார்த்த அந்த பெண், "வா ப்ரின்ஸி வீட்டுக்கு போகலாம் இங்க நாய் தொல்லை ஜாஸ்தியா இருக்கு" என்றாலே பார்க்கலாம்.

1 comment:

கிவியன் said...

//ஒண்ணும் பண்ணாது. சும்மா ஜாலியா ஓடி வந்தது"// unleashedஆக நாயை நடத்திக் கூட்டிக்கொண்டு வருபவர்கள் சொல்வதுதான், நமக்கும் நாய் வளர்ப்பவருக்கும் தெரியும் கடிக்காதென்று ஆனால் நாய்க்கு எப்படி தெரியும்?

உடனே அவள் நாயிடம், " இங்க வா aunty பயப்படறாங்க பாரு" அப்படின்னா.
:0))) LOL.

மனுஷாளோட பேசரதுக்கு பதிலா நாயோட பேசரது எவ்வளவோ தேவலைன்னு நெனக்கறவங்க இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம்ம சிவக்குமார் வீட்லயும் நாய் வளர்த்தது நினைவுக்கு வருகிறது. மாலையில் நான், துரைசாமி, இன்னும் வீட்டுப் பக்க நண்பர்கள் பைபாஸ் பாலத்தின் தடுப்பு சுவர் (2007ல் போன போது, பல் விழுந்த பொக்கையானது போல் எல்லாம் உடைந்து போய் மிகவும் பரிதாபமாக இருந்தது) (குட்டிச் சுவர்னுகூட வெச்சுக்கலாம்!!)மீது அமர்ந்து பேசிக்க் கொண்டும் (கடலை போடுதல் என படிக்கவும்) அப்படியே சைட்டும் அடித்துக் கொண்டிருப்போம். சிவக்குமார் டாபர்மேனை பிடித்துக்கொண்டு வருவான். அந்த வகை நாய் எப்படி இருக்கும் என்று தெரிந்ததுதானே. முன்னே பற பறவென்று விட்டா ஓடி விடுவது மாதிரி நடக்க பின்னே சிவக்குமார் பட்டையை இழுத்துப் பிடித்துக்கொண்டு வருவான். தூரத்திலிருந்தே அதை பார்த்ததும், துரைசாமி, “அங்க பாரு, ஜிம்மி சிவக்குமாரோட வாக்கிங் வரான்” என்பான். அது போதது என்று அருகே வந்ததும், நாயை பார்த்து, என்ன ஜிம்மி சிவக்குமாரோட வாக்கிங் வந்தியா” என்பான். உன் நிலைமையை படித்ததும் இதுதான் நினைவுகு வந்தது.