வயது ஏறுவதை உணர்ந்தேன்
ஆண்டவன் சன்னிதியில் அதை கொடு இதை கொடு
என்று கேட்ட நாட்கள் போய்
அவனுக்கு தெரியாதா நமக்கு என்ன கொடுப்பது
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்
டீன் ஏஜ் பெண்களின் எதற்கெடுத்தாலும்
க்ளுக் க்ளுக் கைப் பார்த்து, என்ன லூசுத்தனம்
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்
சாம்பார் படம் என்று சானல் மாற்றிய காலம் போய்
ஆஹா ஜெமினி படம் நல்லாருக்கே என்று
பார்க்க உட்கார்ந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்
ரஜினி ஸ்டைலில் மாடி ஏறிய பின்
பத்து நிமிட ஓய்வு தேவை பட்ட போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்
60 கி.மீ ஸ்பீடில் பைக்கில் போக ஆசைப்பட்டது போய்
40கி.மீ க்கே என்னதுக்கு இவ்வளவு வேகம்
என்று கேட்கும் போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்
கண்ணாடியில் பார்க்கும் போது தெரியும்
நரை முடியும்
தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும்
இரு குழந்தைகளும்
அது உண்மை என்று உறுதி படுத்தின
அம்மா வீட்டுக்கு சென்ற போது
வயதான காலத்திலும்
உனக்கு பிடிக்கும்னு
கேசரி பண்ணினேன் என்று
ஆசையாக அம்மா கொடுத்த போது
மீண்டும் குழந்தையானேன்.
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)


5 comments:
ம்ம்ம் அம்மா வீட்டுக்கு விஜயம் செய்து ஜாலியாக ஒரு வாரம் இருந்ததை, கேசசரி சாப்டமா என்சாய் பண்ணமா என்று போகம இப்படி பில்ட் அப் செய்து ஒரு கவிதை அளவுக்கு கொண்டு வந்துவிட்டாயே??
அதுக்காக வயதாவதை அதுவும் இரண்டு குழந்தைகள் எனக்கு என்றெல்லாம் சொல்லியா வருத்த படுவார்கள்..
ஆஹா... சும்மா வரிகளை உடைத்து உடைத்து எழுதினேன். அதுக்கு கவிதை ஸ்டேடஸ் கொடுத்ததுக்கு நன்றி. டிகிரி சர்டிஃபிகேட்ட பார்த்த போது, அடடா டிகிரி முடிச்சு 23 வருஷம் ஆச்சுங்ற போது அந்த ஃபீலிங் வந்தது.
கொன்னுட்டே போ!! தமிழ் அவ்வளவா தெரியாத என் மனைவியே ஏகத்துக்கு பாராட்டினாள்!!
நெசம்மாவா.. ரொம்ப நன்றி ஸ்ரீ
கடைசி பத்தியிலே செம 'குத்து' (அதாவது 'punch')!!!
Post a Comment