அப்பா.. பசங்களுக்கு பரிட்சை முடிஞ்சாச்சு. அடுத்து, எவ்வளவு விஷயம் இருந்தாலும், போர் அடிக்கறது என்ன பண்றது புலம்பல் ஆரம்பிச்சாச்சு. சரின்னு என் வாழ்க்கையில் முதல் முறையா (கடைசியும் இதுதான்) சிம்பு படம் போனோம். கெளதம் படம் கொஞ்சம் பரவல்லாம இருக்கும்னுட்டு. படத்துல அடிக்கடி சிம்பு சொல்ற டயலாக், “உலகத்துல இவ்வளவு பெண்கள் இருக்கறச்ச நான் ஏன் ஜெஸ்ஸிய (த்ரிஷா) லவ் பண்றேன்”. வெளில வந்து நான் சொன்னது , “ உலகத்துல இவ்வளவு படம் இருக்கறச்ச நான் ஏன் இத வந்து பார்த்தேன்.” பேசறாங்க,பேசறாங்க, படம் முழுக்க பேசிண்டே இருக்காங்க. வீட்டுக்கு வந்தப்புரம் கூட சிம்பு என் கிட்ட பேசற மாதிரி இருக்கு. கதைல ஆழமே இல்ல. த்ரிஷா பொம்மையாகவே வருகிறார். எப்பம்மா நடிக்க போர? பல்லைக் கடித்து கொண்டு பேசும் சிம்பு, அதிகமான ஆங்கில வசனங்கள்(கெளதமின் பழைய படங்களை ஞாபகப் படுத்துகிறது)
த்ரிஷா பின்னாலேயே அலையும் சிம்பு, “நான் உன்னை லவ் பண்றேன், இல்ல இல்ல இது சரி பட்டு வராது எவ்வரிதிங் இஸ் ஒவர், இல்ல இல்ல இல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” - இப்படி மாத்தி மாத்தி பேசி சிம்புவ மட்டும் இல்ல நம்மளையும் சாவடிக்கிறார் த்ரிஷா. விண்ணைத்தாண்டி வந்த தலைவலி.
Saturday, April 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
விண்ணைத்தாண்டி வருவாயா பிடிக்காமல் போனதும்
வயதானதினாலோ???
எந்த வயதிலும் இந்த மாதிரி அபத்தங்கள் பிடிக்காமல் போனதுதான் ஒரு வேளை என் ப்ரச்னையோ??????
Post a Comment