Saturday, September 5, 2009

அரசாங்க உத்யோகம்

ஏற்கனவே தெரிந்தவர்கள், புதிதாக அறிமுகமானவர்கள் எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி - கவர்ன்மெண்ட் வேலையைப் போய் ஏன் விட்டீங்க?

நான் கூட ரொம்ப ஆசையாத்தான் போய் வேலையில் சேர்ந்தேன். முதல் நாளே பயங்கர காமெடி. நான் இதற்கு முன் தனியாரிடம் வேலை செய்ததால், பத்து மணி ஆபிஸுக்கு ரொம்ப சரியாக ஒன்பதே முக்காலுக்கே போய் விட்டேன். செக்யூரிடி கார்ட் என்னை விசாரித்து நிர்வாகப் பிரிவில் உட்கார வைத்து விட்டு சென்று விட்டார்.

பத்தரை மணிக்கு மேலே ஒவ்வொருவராக வந்தனர். அந்த செக்‌ஷனில் மொத்தம் நான்கு பேர். (ஹெட் க்ளார்க்கையும் சேர்த்து) அதில் ஒருவர் வந்தவுடன் என்னம்மா என்று என்னிடம் விசாரித்து விட்டு தன்னுடய இடத்துக்கு சென்று தன்னுடைய டேபிள், சேரை எல்லாம் நன்றாக துடைத்து விட்டு, ரெண்டு ஊதுபத்தியை ஏற்றி குண்டூசி ஸ்டாண்டில் சொருகி வைத்து விட்டு, டேபிள் கண்ணாடியின் கீழ் உள்ள சாமியைக் கும்பிட்டு விட்டு (ஒரு ஐந்து நிமிட ப்ரேயர்),
“என்னப்பா விஷயம் இன்னிக்கி” என்று பக்கத்தில் இருப்பவரிடம் அளவளாவி விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றரை. பிறகு பத்து நிமிடத்துக்கு உபயோகப்படாத ஒன் சைட் பேப்பரை 1இன்ச் அகலம், 4இன்ச நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொண்டார். (பின்னால் தெரிந்து கொண்டது அது உயரதிகாரிகளுக்கு கோப்புகளை அனுப்பும் போது அடையாளத்துக்கு வைக்க பயன் படும் என்று).

அடுத்து, “ ரொம்ப டயர்டா இருக்குப்பா. ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்”.
நான் ஒருவரைப் பற்றி மட்டும் சொன்னதால் மற்றவர்கள் வேலை செய்தார்கள் என்று அர்த்தம் இல்லை. 12மணிக்கு மேலே என்னுடய அப்பாயின்மெண்ட் ஆர்டரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து என்னை டைப் அடித்து கொண்டு வர சொன்னார்கள். அந்தப் பிரிவில் எனக்கு டைப் அடிக்கும் வேலை தான் கொடுக்கப் பட்டது. மத்தியானமும் கொஞ்சம் கொஞ்சம் தான் வேலை செய்தார்கள். இதுல சுப்பர் காமெடி என்னன்ன அவங்க எல்லாம் ஓவர் டைம் வேலை செய்ததற்கான பணமும் வாங்குவார்கள். அங்கு எனக்கு எவ்வளவு வேலை இருக்கும் என்று புரிந்து போயிற்று.

மறுநாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ” எனக்கு அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை கிடையாதா “ என்று கேட்டேன். நான் ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி, “ அதெல்லாம் சீனியாரிட்டி படிதான் கிடைக்கும்.”
என்னவோ தெரியவில்லை அங்கு வேலை பார்த்த பத்து வருடத்தில் நான் சீனியராகவே ஆகவில்லை. வைரமுத்து ஸ்டைல்ல சொல்லனும்ன,

வருடா வருடம் சீட் சேஞ்ச் கேட்டேன்
புத்திசாலியான உயரதிகாரி கேட்டேன்
மூளைக்கு கொஞ்சம் வேலை கேட்டேன்
தனியாய் எனக்கு கப் போர்ட் கேட்டேன்
குறைந்த பட்சம் நல்ல டேபிள் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

மொத்தத்துல ஒரு நல்ல working environment, job satisfaction ரெண்டுமே இல்லாததால வேலையை விட்டேன். மற்ற காரணங்கள் இரண்டாம் பட்சம். கால் காசுனாலும் கவர்ன்மெண்ட் உத்யோகம்ங்கிறதெல்லாம் அபத்தமாப் பட்டது.

நான் இதற்கு முன் வேலை செய்த தனியார் கம்பெனியில் நான் தான் அக்கவுண்ட்ஸ் இன்சார்ஜ். நல்ல மரியாதையும் இருந்தது. இங்கு ஒன்றுமே இல்லை.

நான் பண்ணிய மடத்தனம் என்னன்ன அங்கேயே இருந்து ஓய்வு நேரங்களில் (அதான் நிறைய கிடச்சதே) என்னுடைய பாடங்களை படித்து icwa final முடிக்காததுதான். என்ன பண்றது வேலைக்குப் போவதில் இருந்த interest படிக்கரதுல இல்லாம போச்சு.

2 comments:

கிவியன் said...

எல்லா அரசாங்க அலுவலகங்களும் ஏறக்குறைய இதே மாதிரிதான் நிலை.

//என்னவோ தெரியவில்லை அங்கு வேலை பார்த்த பத்து வருடத்தில்//

//மொத்தத்துல ஒரு நல்ல working environment, job satisfaction ரெண்டுமே இல்லாததால வேலையை விட்டேன்//

//என்ன பண்றது வேலை செய்யறதுல இருந்த interest படிக்கரதுல இல்லாம போச்சு.//

job satisfaction இல்லாத போது எப்படி வேலையில் interest வரும்??

ஞானோதயம் ஏற்பட பத்து வருடங்கள்!! மேற் கூறிய வாக்கியங்களுக்கு இடையில் நீ வேலையை விட்டதன் உண்மை காரணம் மறைந்துள்ளதோ?

Job satisfaction என்பது என்னைப் பொறுத்த வரை எந்த வேலையிலும் இல்லை என்றே தோன்றுகிரது. மனித மனம் அப்படி.

என்ன மாதிரி working environment எதிர்பார்த்தாய்? ஒரு வேளை உனக்கு நீ செய்யும் வேலை பிடித்துப் போயிருந்தால் நீ வேலை பார்க்கும் சுற்றுபுற சூழல் ஒரு பொருட்டாக இருந்திருக்காது.

//படித்து icwa final முடிக்காததுதான்//
இதுதான் பலரும் செய்யும் retrospection. தேவையற்ற மனச்சுமையை தவிர வேற என்ன தரப்போகிறது??

ஜெயந்தி நாராயணன் said...

//job satisfaction இல்லாத போது எப்படி வேலையில் interest வரும்??
//

நான் சொல்ல வந்தது பொதுவாக interest in "going for a job"
//ஒரு வேளை உனக்கு நீ செய்யும் வேலை பிடித்துப் போயிருந்தால் நீ வேலை பார்க்கும் சுற்றுபுற சூழல் ஒரு பொருட்டாக இருந்திருக்காது.//
உண்மை. ஏதாவது ஒன்றாவது இருந்திருக்கலாம்.