சமீபத்தில் என்னை டிஸ்டர்ப் பண்ணிய ஒரு செய்தி....
ஒரு இளம் சாஃப்ட்வேர் எஞ்சினியர் புதியதாக கார் வாங்கி விட்டு வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். புது காரைப் பார்த்தவுடன் அவருடைய ஐந்து வயது குழந்தை வீட்டிலிருந்து காரை நோக்கி வந்திருக்கிறது. குழந்தை காரின் அருகே வருவதைப் பார்த்து காரை நிறுத்த எண்ணியவர் பதட்டத்தில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்திருக்கிறார். குழந்தை ஸ்பாட்ல உயிர் இழந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதிரி இன்னொரு நிகழ்வு. ஸ்கூல் அருகே. புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொண்ட ஒருவர் இதே மாதிரி மாற்றி ஆக்ஸிலேட்டரை மிதித்ததில் ஸ்கூல் குழந்தைகள் வந்த ஆட்டோவில் மோதியதில், மற்றவர்களுக்கு சிறிய அடியும், ஒரு குழந்தைக்கு மட்டும் ஒரு காலை எடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
எட்டு வருடங்களுக்கு முன்னாலேயே கார் ஒட்டக் கற்றுக்கொண்டு லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் தனியாக காரை எடுக்கும் சந்தர்ப்பமே வருவதில்லை. குடும்பத்துடன் செல்லும் போது வீட்டுக்கா(ர)ரே ஒட்டிடறார். அப்பப்ப கேட்டு விட்டுட்டேன். எல்லாரும் சொல்வாங்க டூ வீலர விட கார் ஓட்றது சேஃப்னு. ஆனா இந்த ந்யூஸ்லாம் படிக்கும் போது டூ வீலர் பெட்டர்ப்பா. டூ வீலரில் இந்த குழப்பம் இல்லை. நம்ம சேஃப்டிய விட மத்தவங்க சேஃப்டி ரொம்ப முக்கியம்.
Thursday, September 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)


3 comments:
//குடும்பத்துடன் செல்லும் போது வீட்டுக்கா(ர)ரே ஒட்டிடறார்// அப்போ தனியா போகும் போது ட்ரைவர் வெச்சுப்பாரா??
//நம்ம சேஃப்டிய விட மத்தவங்க சேஃப்டி ரொம்ப முக்கியம்.// அஹா என்ன ஒரு உயர்ந்த மனப்பாங்கு??
நான் மும்பையில் ஓட்டுனர் பயிற்சிக்குப் பின் கார் லைசென்சஸ் எடுக்க தானே மண்டல போக்குவரத்துத் துறைக்கு ஓட்டுனர் தேர்வுக்கு சென்றபோது அவரவ்ர் ட்ரைவிங்க் பயிற்சி பள்ளி வண்டில ஒவ்வொருத்தரா ஒட்டனும். பக்கத்து சீட்டுல நம்ம பயிற்சி ஆசிரியர் அமர்ந்து இருப்பார். ஒரு பத்தடி தள்ளி தேர்வு அதிகாரி நின்று கொண்டிருப்பார். அவருக்கு பின்னாடி தெலுங்கு பட வில்லன சுத்தி நிக்கிர அடியாள் மாதிரி அண்ணிக்கி லைசென்ஸ் எடுக்க வந்த சகல பயிற்சி பள்ளி மக்களும் அவருக்கு பின்னாடி நின்னுகிட்டு இருப்பாங்க. அதிகாரி கைல வெச்சிருக்கிர பேடுல பாத்து ஒட்டுரவர் பேர கேப்பாரு அப்புறம் கையால ஒரு சமிங்க காட்டுவாரு உடனே நாம வண்டிய ஒரு நேர் கோட்டுல சுமார் 300 அடி ஒட்டிக்கிட்டு போகனும் அவ்வளவுதான். ப்ரேக் போடரது, க்ளட்சு மற்றும் ஆக்ஸலரேட்டர் அமுக்கரது எல்லாம் நம்ம பயிற்சி ஆசிரியர் பாத்துக்குவார். நம்ம வேல ஸ்டியரிங்க மாத்ரம் பிடிச்சிக்கனும். அதிகாரி எப்ப கைய அசைச்சார் எப்ப நாம் வண்டிய கிளப்பினோம் என்று புரிவதரற்குள் நான் சோதனையில் வெற்றி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற்று விட்டேன். அதன் பின் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் சரியாக வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன். ஆக இப்படி இருக்கும் போது நீ சொன்ன மாதிரியான விபத்துக்கள் மிக சகஜம்.
பிகு:அன்றய காலக்கட்டப்படி ஓட்டுனர் சோதனைக்காக ருபாய் 800 கொடுத்திருந்தேன் (கொடுத்துத்தான் ஆக வேண்டும்)
லைசென்ஸ் எடுப்பதற்கு இங்கும் அதே ப்ரொஸீஜர்தான். என்னை ரிவர்ஸ் எடுக்க சொன்னங்க. ஒரு ஷேப்பாதான் வண்டி போச்சு. இருந்தாலும் வாங்கின காசுக்கு லைசென்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க.
டூ வீலர்க்கு இன்னும் காமெடி. ரெண்டு மணி நேரம் முன்னாலயே போய்ட்டேன். ஒரு 800 ஆவது (அதான் 100 எட்டு) போட்டு இருப்பேன். கடைசில பெருசா ஒண்ணும் கண்டுக்கல. கால கீழ ஊனினாக் கூட லைசென்ஸ் கிடைச்சிருக்கும். (லேடிஸ் கிட்ட ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஹ இருக்க மாட்டாங்களாம்).
//அதன் பின் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் சரியாக வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன்.//
இப்ப ஒழுங்கா ஓட்றதில்லையா.
Post a Comment